தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருவது மட்டுமின்றி திறமையான நடிகர்களின் நடிப்பை பாராட்டி அவர்களுக்கு ஊக்கமளித்து வருவதும் தெரிந்ததே.
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைவரின் மனதையும் கவர்ந்த ராஜூமுருகனின் 'ஜோக்கர் படத்தின் குழுவினர்களுக்கு தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் 'ஜோக்கர்' படத்தில் யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை. இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர். கண்களில் கண்ணீர். தயவு செய்து பாருங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 'ஜோக்கர்' படத்தின் இசையமைப்பாளர் சீன்ரோல்டான் அவர்களின் பின்னணி இசைக்கு தனியாக ஒரு பாராட்டு பதிவையும் அவர் பதிவு செய்துள்ளார். தனுஷின் கண்களிலேயே கண்ணீரை வரவழைத்த 'ஜோக்கர்' திரைப்படத்திற்கு இதைவிட வேறு பாராட்டு தேவையில்லை.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: