வினய் நடிப்பில் பிரபல இயக்குனர் சரண் இயக்கிய 'ஆயிரத்தில் இருவர்' படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வினய் நடிக்கும் புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இளையதளபதி விஜய் நடித்த பகவதி, சரத்குமார் நடித்த 'ஏய்', அர்ஜூன் நடித்த 'வாத்தியார்' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் வெங்கடேஷ் இந்த படத்தை இயக்கவுள்ளார்.
அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கனடாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: