Propellerads
Navigation

ரசிகராக மாறிய ரஜினிகாந்த்

பிரான்ஸ் நாட்டின் ரியோ நகரில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே சாக்சி மாலிக் வெண்கல பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த நிலையில் நேற்று நடந்த பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளி வென்றார்.

இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெள்ளி பெற்றுக்கொடுத்த பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி உள்பட பல விவிஐபிக்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வரும் நிலையில் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் சிந்துவை பாராட்டியுள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தளத்தில் '‘ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவிற்கு எனது வாழ்த்துக்கள். நான் உங்களின் தீவிர ரசிகனாகவே மாறிவிட்டேன்.’ என்று கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ரஜினிகாந்த், பதக்கம் வென்ற வீராங்கனைக்கு ரசிகராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: