நடிகை பூனம் பஜ்வா, தற்போது சோர்ந்து போயுள்ளாராம். இதற்கு முத்தின கத்திரிக்காய் தான் காரணமாம். (என்னது முத்தின கத்திரிக்காயா? என்று ஆர்வத்துடன் பார்ப்பவர்களுக்கு.... சாரி பாஸ்..)
முத்தின கத்திரிக்காயின் வெற்றியை ரொம்பவே எதிர்பார்த்து காத்திருந்த பூனம் பஜ்வா அந்த திரைப்படம், பெரிய அளவில் வரவேற்பை பெறாததால், சோர்ந்து போயுள்ளார்.
'கவர்ச்சியாக நடித்தால், கோலிவூட்டில் அதிக வாய்ப்பு கிடைக்கும்' என, யாரோ சிலர் கூறியதால் தான், அண்மைக்கால திரைப்படங்களில், கவர்ச்சி கொடியை பறக்க விட்டிருந்தார்.
ஆனால், பூனம் பஜ்வாவின் கவர்ச்சியை, கோலிவூட் ரசிகர்கள் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. தற்போது, மலையாளம், தமிழில், தலா ஒரு திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
'தாராளமாக நடித்து விட்டதால், இனிமேல் ஹீரோயின் வாய்ப்பு தேடி வருவது கஷ்டம் தான்' என, அவர் காதுபடவே, சிலர் கிசு கிசுப்பதால் விரக்தியில் உள்ளார் பூனம்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: