சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி என ஏற்கனவே இந்த ஆண்டு ஹாட்ரிக் படங்களில் நடித்துள்ள விஜய்சேதுபதி நடித்த 'தர்மதுரை' நேற்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் நேற்றைய ஓப்பனிங் வசூல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ரூ.2.8 கோடி இந்த படம் வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.36 லட்சமும், செங்கல்பட்டு ஏரியாவில் ரூ.69 லட்சமும் இந்த படம் வசூல் செய்துள்ளது. விஜய்சேதுபதியின் படங்களில் இதுதான் பெஸ்ட் ஒப்பனிங் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
'தர்மதுரை' படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்துள்ளதால் இன்றும் பெரும்பாலான திரையரங்குகளி ஹவுஸ்புல் ஆகியுள்ளதாகவும் இந்த வார இறுதி வசூல் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் திருப்திகரமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: