மேலும் விஜய்சேதுபதி நடித்த 'ரெக்க' திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் அவர் நடித்த மற்றுமொரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் தற்போது கிடைத்துள்ளது.
'காக்கா முட்டை' இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, 'இறுதிச்சுற்று' நாயகி ரித்திகாசிங் நடித்த 'ஆண்டவன் கட்டளை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருவது தெரிந்ததே.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும், இந்த படம் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தை ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.;


Post A Comment: