Propellerads
Navigation

'பாகுபலி 2' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்தது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் சீனாவிலும் வெளியான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது இயக்குனர் ராஜமவுலி இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பில் பிசியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'பாகுபலி' கேரக்டரில் நடித்து வரும் பிரபாஸின் பிறந்த நாளான அக்டோபர் 23ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளிவரவுள்ளதாகவும் இதன்பின்னர் அடுத்தடுத்து டிரைலர், பாடல் வெளியீடு என இந்த படத்தின் புரமோஷன் பணிகள் படிப்படியாக ஆரம்பமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share
Banner

Post A Comment: