இந்தப் படம் ஹிந்தியில் வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹிந்திப் படத்தை இயக்கிய அஸ்வினி ஐயர் திவாரி தான் அம்மா கணக்கு படத்தையும் இயக்கியுள்ளார். இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
த்ரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில் என தமிழ் சினிமாவில் தரத்தை மேலும் கீழிறக்கும் படங்களில் நாயகனாக நடித்த ஜி.வி.பிரகாஷ் அடுத்து எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் நாயகனாக அறிமுகமான டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் ஜி.வி.பிரகாஷ் ரவுடியாக வருவதை நாம் பார்த்து சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
தனுஷுக்கும், ஜி.வி.பிரகாஷுக்கும் இடையே எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். இப்போது இருவருமே அவரவர் படங்கள் மூலும் மோதிக் கொள்ள உள்ளார்கள். அம்மா கணக்கு படமும், எனக்கு இன்னொரு பேர் இருக்கு படமும் ஜுன் 17ம் தேதி வெளியாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனுஷுக்கும், ஜி.வி.க்கும் இடையே ஏதோ ஒரு கணக்கு இருக்கு.


Post A Comment: