நடிகை எமி ஜெக்சன், பிரான்ஸ் தொழிலதிபருடன் ஊர் சுற்றி வருவதாகவும், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரிட்டன் மொடல் அழகியும், நடிகையுமான எமி ஜெக்சன், மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, தாண்டவம், ஐ உட்பட, பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இப்போது, சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும், 2.0 திரைப்படத்திலும், கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிரான்ஸ் தொழிலதிபர் ஜின் பெர்னார்ட் என்பவருடன், எமி ஜெக்சன் ஊர் சுற்றி வருவதை, தி சன் என்ற ஆங்கில நாளிதழ் படம் பிடித்து காட்டியுள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழாவில், ஜின்னை சந்தித்த எமி, அந்த நாள் முதல் தன் நட்பை வளர்த்து வந்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தின் பல இடங்களில், இருவரும் ஜோடியாக ஊர் சுற்றி வருகின்றனர். இருவருக்கும் இடையே இருப்பது, காதலா அல்லது நட்பா என, கோடம்பாக்கம் சினிமா வட்டாரத்தில் உள்ள பலர் தலையை பிய்த்துக் கொள்கின்றனர்.


Post A Comment: