மிருகம், ஈரம் திரைப்படங்களில் நடித்த நடிகர் ஆதியின் மார்க்கெட் அரவாண் திரைப்படத்தில் தோல்வியினால் வீழ்ச்சி கண்டது.
சில ஆண்டுகள் காணாமல் போயிருந்தவர், தனது அண்ணன் சத்ய பிரபாஸ் இயக்கிய யாகவராயினும் நாகாக்க திரைப்படத்தில் மீள்பிரவேசம் செய்தார்.
ஆனால், பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட அந்த திரைப்படம் தோல்வியடைந்தது. அதனால் ஆதிக்கு தமிழில் புதிய திரைப்படமில்லை. அதையடுத்து தெலுங்குக்கு சென்று சில திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர், இப்போதும் சில திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், தமிழில் சரவணன் இயக்கும் புதிய திரைப்படத்தில் இப்போது நடித்து வருகிறார். யாகவராயினும் நாகாக்க திரைப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்த நிக்கி கல்ராணியே மீண்டும் ஜோடியாகியிருக்கிறார்.
காமெடி பேய் கதையில் உருவாகிறது. ஏற்கெனவே ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் திரைப்படத்தில் அதிரடி பேயாக நடித்த நிக்கி கல்ராணிக்கு இந்த திரைப்படத்தில் பேயைக்கண்டு அஞ்சி நடுநடுங்கும் வேடமாம்.
டார்லிங்கில் அவர் நடித்தது போன்ற ஒரு பயங்கரமான பேய்தான் இந்த திரைப்படத்தில் நிக்கி கல்ராணியை மிரட்டுகிறதாம்.


Post A Comment: