Propellerads
Navigation

பாடல்களே இல்லாமல் வெளியாகும் பாகுபலி!


ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான சரித்திர படம் பாகுபலி. தமிழ், தெலுங்கில், இந்தியில் வெளியான அப்படம் இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரானது.

 பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் என முக்கியத்துவம் வாய்ந்த நடிகர்கள் நடித்த அந்த படம் மிகப்பெரிய வசூலையும் குவித்தது. அதனால் அதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இன்னும் பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்கி வருகிறார் ராஜமவுலி. அதேசமயம், பாகுபலி முதல் பாகத்தை வேறு சில மொழிகளில் டப் செய்து வெளியிடும் வேலைகளும் நடந்து வருகிறது.

அந்த வகையில், தற்போது சீன மொழியில் பாகுபலி படத்தை டப் செய்துள்ளனர். அதோடு இதுவரை உலக அளவில் ஐந்தாயிரம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ள பாகுபலி சீன டப்பிங்கை இம்மாதம் இறுதியில் சீனாவில் மட்டுமே ஐந்தாயிரம் தியேட்டர்களில் வெளியிடுகிறார்களாம். 

அதனால் ஏற்கனவே 600 கோடி வசூலித்துள்ள பாகுபலி, சீனாவில் அதிகபட்சமாக 400 கோடி வரை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கிறார்களாம். மேலும், பாகுபலி படத்தில் பல பாடல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், சீன டப்பிங்கில் ஒரு பாடல்கூட இல்லாமல் வெளியிடுகிறார்களாம்.
Share
Banner

Post A Comment: