விஜய்யின் 60 ஆவது படத்தை 'அழகிய தமிழ் மகன்' பட இயக்குநர் பரதன் இயக்கி வருவது அனைவரும் அறிந்த தகவல்தான். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்துக்கு எங்க வீட்டுப் பிள்ளை என பெயர் சூட்ட இருப்பதாக தகவல் அடிபடுகிறது. விஜய் 60 படத்தின் 40 சதவிகித காட்சிகள் கிராமத்து பின்னணயில் அமைக்கப்பட்டுள்ளதால், இப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்றது.
விஜய் 60 பற்றி லேட்டஸ் தகவல் என்ன? திருநெல்வேலியில் படப்பிடிப்பு முடிவடைந்ததும் சென்னை திரும்பிய படக்குழு, சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு தற்போது 2ஆவது ஷெட்யூலுக்காக ஹைதராபாத் சென்றுள்ளது. ஐதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நேற்று படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
தற்போது நடைபெறும் 'விஜய் 60' இரண்டாவது ஷெட்யூலில் விஜய் உடன் கீர்த்தி சுரேஷ் உட்பட முக்கிய நட்சத்திரங்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளார்களாம். திருமண விழா பாடல் ஒன்று அங்கு படமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அதோடு விஜய்யின் அறிமுகப் பாடலையும் அங்கேயே எடுக்கவிருக்கிறார்களாம்.


Post A Comment: