ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘சந்திரமுகி’. இப்படத்தை பி.வாசு இயக்கி இருந்தார். இவர் சமீபத்தில் கன்னடத்தில் ‘சிவலிங்கா’ என்ற படத்தை இயக்கினார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து அதை ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் இயக்குவதாக செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது ‘சிவலிங்கா’ பெயரிலேயே தமிழில் படம் இயக்குவதாக பி.வாசு அறிவித்திருக்கிறார்.
‘சிவலிங்கா’ படத்தில் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ படம் மூலம் பிரபலமான ரித்திகா சிங் நடிக்கிறார். இவர்களுடன் மிக முக்கிய வேடத்தில் சந்திரமுகிக்கு பிறகு மீண்டும் பி.வாசுவுடன் இணைகிறார் வடிவேலு. மேலும் மிக முக்கிய வேடத்தில் ஷக்திவேல் வாசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தை அஜித் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், விஜய் நடித்த திருப்பாச்சி, கத்தி மற்றும் சமீபத்தில் வெளியான மிருதன் உட்பட 400க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்தவரும் சசிகுமார் நடித்த வெற்றிவேல் படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்த ஆர்.ரவீந்திரன் இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்குகிறது. அதனை தொடர்ந்து பெங்களூர், மைசூர், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற உள்ளது.


Post A Comment: