Propellerads
Navigation

'கபாலி' நாயகி, கமல் மகளின் கவர்ச்சிப் படங்கள்


ரஜினிகாந்துடன் ஒரு நடிகை நாயகியாக நடிக்கிறார் என்றால் அவருக்கென தனி இமேஜ் உருவாகும். அதன் பின் அவர் தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக மாறிவிடுவார். 

'கபாலி' படத்தில் ரஜினிகாந்தின் ஜோடியாக நடிக்கும் ராதிகா ஆப்தே ஒரு திறமையான நடிகை. அதே சமயம் மிகவும் துணிச்சலான நடிகையும் கூட. 

ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தாலும் பிரபல ஆங்கில இதழ் ஒன்றிற்கு மிகவும் கவர்ச்சிகரமான போஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார். இந்த மாத இதழின் அட்டைப் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் அந்தப் புகைப்படம் இணையத்தைக் கலக்கப் போவது உறுதி.

ரஜினிகாந்தின் நண்பரும் நடிகர் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன் மற்றுமொரு பிரபல ஆங்கில இதழ் ஒன்றிற்கு மிகவும் கவர்ச்சிகரமான போஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார். 

சிகப்பு நிற உடையில் அசத்தலாக கவர்ச்சியாக இருக்கும் இந்தப் புகைப்படமும் திரையுலகில் உள்ளவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஒரே மாதத்தில் இரு பெரும் தமிழ் நட்சத்திரங்களின் படங்களிலும், குடும்பத்திலும் இருக்கும் ராதிகா ஆப்தே, ஸ்ருதிஹாசன் இருவரின் இந்த அட்டைப் படங்கள் சமூக வலைத் தளங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தப் போகிறது.
Share
Banner

Post A Comment: