மேலும், மலையாளத்தில் 2 பெண்குட்டிகள் என்ற படத்தை அடுத்து ஷஜாகனும் பரிகுட்டியும் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஆக, தனது குடும்ப இமேஜை பாதிக்காத வகையில் நல்ல வேடங்களாக செலக்ட் பண்ணி நடித்து வருகிறார் அமலாபால். அதேபோல், சில விளம்பர படங்களிலும் நடித்து வரும் அவர், தற்போது விஜய்யுடன் இணைந்து ஒரு ஜூவல்லரி விளம்பர படத்தில் நடித்திருக்கிறார். விஜய்யும்-அமலாபாலும் தோன்றும் வீடியோ இணைய தளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.
வைரலாக பரவும் விஜய்-அமலாபால் வீடியோ
ஏ.எல். விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் நடித்தார் அமலாபால். அப்போதே அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. அதனால் அதையடுத்து தான் இயக்கிய தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபாலை நடிக்க வைத்தார் ஏ.எல்.விஜய். அதையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். என்றாலும், திருமணத்திற்கு பிறகும் தான் கமிட்டாகியிருந்த சில மலையாள படங்களில் நடித்துக்கொடுத்தார் அமலாபால். அதோடு, பசங்க-2 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர், இப்போது அம்மா கணக்கு படத்தில் ரேவதியின் மகளாக நடித்து வருகிறார். அதோடு, பிரியதர்ஷன் இயக்கும் சில நேரங்களில் என்ற படத்தை பிரபுதேவாவுடன் இணைந்து தயாரித்து வருகிறார்.
Post A Comment: