தனுஷ் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள கொடி படத்தில் எஸ்.ஏ.சந்திர சேகரன் நடித்திருக்கிறார். இந்த படத்தில் மூத்த அரசியல்வாதியாக தனுஷின் காட் பாதராக நடித்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
கதைப்படி தனுசுக்கு அரசியல் சொல்லிக்கொடுக்கும் ஆசானாக நடித்துள்ள அவருக்கு நிறைய காட்சிகள் உள்ளதாம். இதையடுத்து, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து வரும் எமன் படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க எஸ்.ஏ.சியிடம் பேசியுள்ளார்களாம்.
மேலும், தற்போது முழுநேர நடிகராகி விட்ட அவர், தன்னை சந்திக்கும் டைரக்டர்களிடம் பெரிய கேரக்டரில்தான் நடிப்பேன் என்றில்லை. சில காட்சிகளில் வரும் கேரக்டராக இருந்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் முன்மொழிந்து வருகிறார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன்.


Post A Comment: