Propellerads
Navigation

ஏப்ரல்11-ந்தேதி முதல் விஜய்க்கு ஆக்சன் : சொல்கிறார் பரதன்!



விஜய் இரண்டு வேடங்களில் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியவர் பரதன். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ரேயா, நமீதா நடித்திருந்தனர். விஜய் ஹீரோ-வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்த அந்த படத்தில் சந்தானம் காமெடியனாக நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஆனாலும் விஜய்க்கு பிடித்தமான படமாகவும் அது அமைந்தது. அதன்காரணமாக மீண்டும் பரதனுக்கு தனது 60வது படத்தை இயக்கும் வாய்ப்பினை கொடுத்திருக்கிறார் விஜய்.

கடந்த சில மாதங்களாக இப்படத்திற்கான கதை விவாதம் சென்னையில் நடந்து வந்ததோடு, ப்ரீ புரொடக்சன்ஸ் வேலைகளையும் கவனித்து வந்தார் பரதன். மேலும், இந்த 60வது படத்திற்காக உடல்ரீதியாகவும் தன்னை தயார்படுத்திக்கொண்டு வந்த விஜய், வருகிற ஏப்ரல் 11-ந்தேதி முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் உள்பட சில நடிகை கள் நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு, டேனியேல் பாலாஜி ஆகியோர் நடிக்கிறார்கள். சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார்.

Share
Banner

Post A Comment: