Propellerads
Navigation

சே.. சே... அசின் இப்படி சொல்லிட்டாரே...

அசின் மீண்டும் நடிக்க இருக்கிறார், அவர் நடிப்பதற்கு கணவர் தடை விதிக்கிறார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என வெளியாக செய்தியை நடிகை அசின் மறுத்துள்ளார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரபல தொழிலதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்ட அசின், சமூக வலைத்தளமான இன்ஸ்ட்ராகிராமில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

'என்னை பற்றி கற்பனையான செய்திகள் பரவி வருகிறது. நான் திருமணத்துக்கு முன்பே திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டேன். நடித்துக் கொண்டிருந்த திரைப்படங்களை முடித்து கொடுத்துவிட்டேன். விளம்பர படங்களில் நடிப்பதையும் நிறுத்திவிட்டேன். 

நான் நடித்த விளம்பர படங்களின் ஒப்பந்த காலமும் முடிந்து வருகிறது. இனி சினிமாவிலோ, விளம்பரங்களிலோ நடிக்க மாட்டேன்.' என அசின் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Share
Banner

Post A Comment: