நடிகர் விஜய்யை தொடர்ந்து ரஜினிக்கும் சொக்கலேட் சிலை செய்து அழகுபார்த்துள்ளனர் இரசிகர்கள். முன்னதாக விஜய் மீதுள்ள அன்பை வெளிப்படுத்த அவரது இரசிகர்கள் மெழுகு சிலை செய்திருந்தனர்.
இந்த நிலையில், கபாலியில் நடித்துள்ள ரஜினிக்கு அவரது கெட்டப்பை மனதில் கொண்டு 600 கிலோகிராம் சொக்லேட்டினால் ஒரு பிரமாண்ட சிலையை உருவாக்கியுள்ளது சென்னையிலுள்ள ஒரு பேக்கரி நிறுவனம்.
இந்த சிலையில் ரஜினி கபாலி கெட்டப்பில் ஸ்டைலாக நிஜத்தில் பார்ப்பது போலவே இருப்பதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த சிலை முன்பு நின்று போட்டோ எடுத்துக்கொண்டு செல்கின்றனர்.
இதை இப்போது ரஜினி இரசிகர்கள் இணையதளங்களிலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.


Post A Comment: