மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சில படங்களில் கதாநாயகியாக நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் கீர்த்தி சுரேஷ். மாஜி நடிகை மேனகாவின் மகள் என்பதால் அவருக்கு தமிழில் நல்லதொரு என்ட்ரி கிடைத்தது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் பல படங்களை கமிட் பண்ணினார். அதனால் இது என்ன மாயம், ரஜினி முருகன், நீனு சைலஜா ஆகிய படங்களில் நடித்து வந்தார் கீர்த்தி.
அதையடுத்து, பாம்பு சட்டை, தொடரி படங்களில் நடித்து வந்தபோது மணிரத்னத்தின் புதிய படத்திலும் நடிக்கயிருந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால், அவர் நாட்களை இழுத்துக்கொண்டே போனதால் அந்த படத்தில் இருந்து விலகி ரெமோ மற்றும் மலையாளம், தெலுங்கிலும் நடித்து வந்தவர், இப்போது விஜய்யின் 60வது படத்திலும் கமிட்டாகி விட்டார். இந்த படத்தில் 3 நாயகிகள் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில, இப்போது கீர்த்தி சுரேஷ் மட்டுமே சிங்கிள் நாயகி என்பது உறுதியாகி விட்டது.
விளைவு, கிடுகிடுவென்று அவரது மார்க்கெட் உயர்ந்து நிற்கிறது. அதோடு, இதற்கு முன்பு கீர்த்தி நடித்த படங்களின் போஸ்டர்களில் அவருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்காதநிலையில், அடுத்தபடியாக அவர் நடித்து வெளியாகியிருக்கும் படங்களில் கீர்த்தி சுரேஷை முன்னிறுத்தி விளம்பரங்கள் செய்யப்பட உள்ளதாம். அதோடு விஜய் பட நாயகியாகி விட்ட நிலையில், அவர் நடித்து வெளியாகயிருக்கும் படங்களின் வியாபாரத்தில் அவரது பெயரும் முன்வைக்கப்படுகிறதாம். ஆக, இப்போது கீர்த்தி சுரேசும் கமர்சியல் நடிகையாகிவிட்டார்.
Post A Comment: