தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா 'வெற்றி' என்பதற்கு ஒரு புதிய அர்த்தத்தைச் சொல்கிறார். ஒரு படத்தின் கதை அவர் மனதைத் தொட்டாலே அந்தப் படம் வெற்றியாம். அதன்பின் அந்தப் படத்தில் நடித்து அது வெளிவந்த பின் கிடைக்கும் வெற்றி தனக்கு 'போனஸ்' என்கிறார். அது மட்டுமல்ல, அப்படி அவருக்குப் பிடிக்கும் கதையில் அவர் நடிக்கும் கதாபாத்திரத்தை மிகவும் ரசித்துச் செய்வாராம். படத்தில் நடிக்கும் போது அது ஒரு புதிய சக்தியைக் கொடுக்கும் என்கிறார்.
அனுஷ்காவின் மனதைக் கவர்ந்த சில படங்கள் ரசிகர்களைக் கவராமல் போய்விட்டது. அதனால்தான் அனுஷ்கா தோல்விகளைக் கண்டு துவள மாட்டார் போலிருக்கிறது. தற்போது 'பாகுபலி 2, எஸ் 3' ஆகியப டங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. அவரைப் பொறுத்தவரையில் அந்த இரண்டு படங்களும் இப்போதே வெற்றிப் படங்கள்தான்.


Post A Comment: