இயக்குநர் கௌதம் மேனன் செய்த ஏற்பாடு காரணமாக நடிகர் தனுஷ் தர்மசங்கடத்துக்கு உள்ளாகியுள்ளாராம்.
கௌதம் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்து வரும் 'அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் முடங்கியுள்ளது.
மறுபுறத்தில், கௌதம் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் எனை நோக்கிப் பாயும் தோட்டா திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகின்றது.
சென்னையில் 2 வாரங்கள் நடைபெற்ற முதல்கட்டப் படப்பிடிப்பைத் தொடர்ந்து சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது 2ஆவது கட்ட படப்பிடிப்புக்காக துருக்கி செல்லவிருக்கிறார்களாம்.
இதனால், இந்த வார இறுதியில் தனுஷ், கௌதம் மேனன் உள்ளிட்ட படக்குழு துருக்கி செல்லவிருக்கிறது.
துருக்கி செல்வதோடு, சிம்பு, மஞ்சிமா இருவரையும் அழைத்துச் சென்று அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் பாடல் காட்சியையும் எடுக்க திட்டமிட்டிருக்கிறார் கௌதம்.
இதை தனுஷிடம் சொன்னபோது அவர் ஆர்வம் காட்டவில்லையாம். தான் செல்லும் இடத்துக்கு சிம்பு வருவது தனுஷுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாக கோடாம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகின்றது.


Post A Comment: