Propellerads
Navigation

தயாரிப்பாளராகிறார் நயன்தாரா.?!

தற்போது 4 படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இது நம்ம ஆளு, திருநாள் படங்களை முடித்து விட்டவர் இருமுகன், காஷ்மோரா, டிக் டிக் டிக் ஆகிய படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படங்களை அடுத்து தமிழில் மோகன்ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் இந்த படத்தில் தனி ஒருவனை விட நயன்தாராவுக்கு வெயிட்டான ரோல் கொடுத்துள்ளாராம் மோகன்ராஜா.

மேலும், இந்த படத்தில் நடித்து முடித்ததும் மீண்டும் விக்னேஷ்சிவன் இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறாராம் நயன்தாரா. அதோடு, அந்த படத்தை நயன்தாராவே தயாரிக்கயிருப்பதாகவும் தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த படம் வருகிற மே மாதம் 12-ந்தேதி பூஜையுடன் தொடங்கயிருக்கிறதாம். அதோடு, நானும் ரவுடிதான் படத்தை அடுத்து மீண்டும் விஜயசேதுபதி-நயன்தாரா-திரிஷா கூட்டணியில் விக்னேஷ்சிவன் ஒரு படம் இயக்குகிறார் என்று வெளியான செய்தி வதந்தி என்கிறார்கள்.
Share
Banner

Post A Comment: