Propellerads
Navigation

ஒபாமாவுடன் விருந்து சாப்பிடுகிறார் ப்ரியங்கா சோப்ரா.?

பாலிவுட் மட்டுமல்ல ஹாலிவுட்டிலும் ஹாட் டாப்பிக் ப்ரியங்கா சோப்ரா தான். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் ப்ரியங்கா குவாண்டிகோ எனும் டிவி சீரியல் மூலம் ஹாலிவுட்டிலும் தடம் பதித்தார். 

இப்போது ஹாலிவுட் படமான 'பேவாட்ச்' படத்தில் நடிப்பதன் மூலம் இன்னும் பிரபலமாகியிருக்கிறார். அதோடு சமீபத்தில் நடந்த ஆஸ்கர் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இப்படி ப்ரியங்காவின் புகழ் ஹாலிவுட் வரை பரவிக்கிடக்கிறது.

இந்த புகழுக்கு இன்னும் புகழ் சேர இருக்கிறது ஒரு நிகழ்வு. அப்படி என்ன நிகழ்வு நடக்கபோகிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது மனைவி மிச்செல் உடன் பல்வேறு பிரபலங்களுக்கு விருந்து கொடுக்க இருக்கிறார். 

இதில் நடிகை ப்ரியங்கா சோப்ராவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ப்ரியங்கா சோப்ராவுடன் பிராட்லி கூப்பர், லூசி லியு, ஜேன் போண்டா, கிளாடிஸ் நைட் உள்ளிட்ட சர்வதேச பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
Share
Banner

Post A Comment: