தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 60வது படத்தின் பூஜையும், 3 நாட்கள் படப்பிடிப்பும் சமீபத்தில் நடந்தது. அதைத் தொடர்ந்து மே மாதம் முதல் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற உள்ளது. அதோடு, படத்தை வருகிற தீபாவளி தினத்தில் வெளியிடவும் முடிவு செய்திருக்கிறார்களாம். அதனால் தாங்கள் கேட்கிற தேதியில் கால்சீட் தரும் நடிகர் - நடிகைகளாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
அந்த வகையில், விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஜெகபதிபாபு, டேனியேல் பாலாஜி, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும், சுகுமாறன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுத, அனல் அரசு சண்டை பயிற்சி கொடுக்கிறார். எடிட்டிங்- பிரவீண், கலை-பிரபாகரன். இவர்கள்தான் விஜய் 60 படத்தின் முக்கிய டெக்னீஷியன்கள். இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


Post A Comment: