'லட்சுமி மேனன் நடித்தால், கண்டிப்பாக, பாக்ஸ் ஆபீஸ் ஹிட் தான்' என, கோலிவுட்டில் பேச்சு இருந்தது. லட்சுமியும், இதை, தனக்கான பெருமையாகவே கருதி வந்தார்.
ஆனால், அவர் நடித்து, சமீபத்தில் வெளிவந்த, மிருதன் படத்தின் ரிசல்ட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால், நம் பெருமைக்கு பங்கம் வந்து விடுமோ என்ற கவலையில் இருக்கிறார் லட்சுமி.
அடுத்தாக, விஜய சேதுபதிக்கு ஜோடியாக, இன்னும் பெயர் சூட்டப்படாத ஒரு படத்திலும், ஜெமினி கணேசன் என்ற படத்திலும் நடிக்கிறார். தொடர்ச்சியாக சறுக்கல்களை சந்தித்தால், கோடம்பாக்கம், தன்னை கை கழுவி விடும் என்பதால், இந்த இரு படங்களிலும், பார்த்து பார்த்து, தன் நடிப்பை மெருகூட்டி வருகிறாராம் லட்சுமி மேனன்.

Post A Comment: