Propellerads
Navigation

‛டில்லி குல்பி'யின் ஏக்கம்


'டில்லி குல்பி' சுரபி, ஜெய்யுடன் இணைந்து நடித்துள்ள, புகழ் படத்தின் ரிசல்ட்டை, ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புடன், டில்லியிலிருந்து, கோலிவுட்டுக்கு அடி எடுத்து வைத்த அவருக்கு, இவன் வேற மாதிரி படத்துக்கு பின், குறிப்பிட்டுச் சொல்லும் படியான வாய்ப்பு கிடைக்கவில்லை. வேலையில்லா பட்டதாரி படத்தில், ஒரு சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டினார். 

இதனால், ஆந்திரா பக்கம் சென்ற சுரபிக்கு, அங்கும், வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தான், புகழ் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இந்த படம், தன்னை கரை சேர்க்கும் என, பெரிதும் நம்புகிறார். 'அழகாய்த் தான் இருக்கிறேன். ஏன், எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை' என்றும் புலம்புகிறார் சுரபி.
Share
Banner

Post A Comment: