சினிமா துறையை முன்னேற்றும் நோக்கத்தில் இலங்கையில் உள்ள சகல திரையரங்குகளையும் டிஜிட்டல் மயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெகுசன ஊடக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய வாய்மூல வினாவுக்கு அண்மையில் பதிலளிக்கையில் அந்நாட்டு நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இதனை தெரிவித்ததாக அந்தத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
'இலங்கையில் உள்ள சகல திரையரங்குகளையும் டிஜிட்டல் மயப்படும் வேலைத்திட்டத்தை எதிர்வரும் 8ஆம் மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.
திரையரங்குகளையும் டிஜிட்டல் மயப்படுத்துவது தொடர்பில் நீண்டகாலமாக ஆலோசனை செய்யப்பட்டதே ஒழிய அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
தற்போது, இந்த அரசாங்கம் இந்தத் திட்டத்தை செயற்படுத்த முன்வந்துள்ளது' என்று அவர் மேலும் கூறியதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post A Comment: