பாலிவுட்டின் இளம் மற்றும் முத்த நடிகை ஆலியாபட். ஆலியா பட் படம் என்றாலே அதில் கண்டிப்பாக முத்தக்காட்சிகள் இருக்கும். தற்போது இவர், 'கபூர் அண்ட் சன்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக இருப்பதால் தற்போது படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் ஆலியா அளித்த பேட்டி ஒன்றில், மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது... பிறமொழி படங்களை அதிகளவில் பார்க்கும் படி என் தந்தை கூறி வருகிறார். மேலும் என்னை பெங்காலி மொழி படத்திலும் நடிக்க சொல்லியிருக்கிறார். பெங்காலி மட்டுமல்ல, எனக்கு தென்னிந்திய படங்களிலும் நடிக்க அதிகளவில் ஆசை, குறிப்பாக மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன், ஒருநாள் நிச்சயம் அது நடக்கும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
கபூர் அண்ட் சன்ஸ் படத்தை தொடர்ந்து ஆலியா, உத்தா பஞ்சாப் மற்றும் கெளரி ஷிண்டேயின் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

Post A Comment: