Propellerads
Navigation

போட்டிப்போட்டு நடித்த தனுஷ்-திரிஷா!


சினிமாவில் பெரிய ரவுண்டு வந்து ஓய்ந்து விட்ட சில நடிகைகள் பின்னர் அரசியல் ரவுண்டை தொடங்கி வருகின்றனர். இந்நிலையில், நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட நடிகைகள் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் இல்லை என்றபோதும், அவர்களை அரசியல் கட்சிகளுடன் இணைத்து வதந்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், தற்போது கொடி படத்தில் தனுசும், திரிஷாவும் எதிரும் புதிருமான அரசியல்வாதிகளாக நடித்துள்ளனர். தனுசுக்கு எதிராக இன்னொரு கட்சியை சேர்ந்தவரான திரிஷா போட்டிக்களத்தில் குதிப்பது போன்றும், ஆவேசமாக மேடைகளில் பேசுவது போன்ற காட்சிகளும் அப்படத்தில் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், திரிஷாவின் திரைப் பயணத்தில் கொடி படம் அவருக்கு புதிய ஓப்பனிங்காக அமைந்திருக்கிறது.

அதேசமயம் இந்த படத்தில் நடிக்க எந்த அரசியல்வாதிகளையும் திரிஷா ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளவில்லையாம். டைரக்டர் சொன்ன கதாபாத்திரத்தை மைண்டில் ஏற்றிக்கொண்டு தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி நடித்திருக்கிறாராம். மேலும், இப்படம் தனுஷின் கேரியரிலும் கொடி முக்கியமான படம் என்பதால், தனுஷ்-திரிஷா இருவரும் சில காட்சிகளில் நீயா நானா என்று போட்டி போட்டு நடித்துள்ளார்களாம்.
Share
Banner

Post A Comment: