Propellerads
Navigation

அலைபாயும் மனசு


கீர்த்தி சுரேஷ் நடித்த, நேனு சைலாஜா என்ற படத்துக்கு, ஆந்திராவில் வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, அங்கும், அவரது மார்க்கெட் எகிறியுள்ளது. புதுப் படங்களில் நடிக்க, அழைப்பு மேல் அழைப்பு வருவதால், என்ன செய்வது என தெரியாமல் திணறிப் போய் தவிக்கிறாராம் கீர்த்தி. ஏற்கனவே ஒப்புக் கொண்ட தமிழ் படங்கள் கைவசம் இருப்பதால், தெலுங்கு படங்களில் நடிக்க முடியாத நிலை, அவருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழை விட, தெலுங்கு படங்களில் நடிக்க அதிகம் சம்பளம் தரப்படுவதால், 'கல்லா கட்ட முடியவில்லையே' என்ற கவலை அவருக்கு

உள்ளது. அப்படி, இப்படி, கால்ஷீட்டை சரி செய்து, அய்ன இஷ்டம் நுவு என்ற தெலுங்கு படத்தில் நடிக்க தேதி கொடுத்துள்ளார். 'கைவசம் உள்ள தமிழ் படங்களை முடித்து விட்டு, தெலுங்கு பக்கம் போய் விடலாமா அல்லது கோலிவுட்டிலேயே காலத்தை தள்ளி விடலாமா' என, கீர்த்தியின் மனசு அலைபாய்கிறதாம்.
Share
Banner

Post A Comment: