Propellerads
Navigation

விஜய் சேதுபதிக்கு காத்துவாக்குல இரண்டு காதல்

விஜய் சேதுபதி நடித்த ‘சேதுபதி’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலும் கடந்து போகும்’ படம் இம்மாதம் வெளியாக இருக்கிறது. இவர் அடுத்ததாக காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே விஜய் சேதுபதி-விக்னேஷ் சிவன் கூட்டணியில் சூப்பர் ஹிட்டான ‘நானும் ரவுடிதான்’ படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவும், திரிஷாவும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

காதல் படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ் சார்பாக ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்தின் முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share
Banner

Post A Comment: