Propellerads
Navigation

திகில் படத்தில் நடிக்கும் ஜீவா

ஜீவா நடிப்பில் ‘போக்கிரி ராஜா’ படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது. இதில் ஜீவாவுடன் சிபிராஜ் மற்றும் ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். 

இப்படத்தையடுத்து ஜீவா-நயன்தாரா ஜோடியில் உருவாகியுள்ள ‘திருநாள்’ படம் வெளியாக இருக்கிறது. இப்படங்களைத் தொடர்ந்து டி.கே. இயக்கத்தில் ‘கவலை வேண்டாம்’ படத்தில் ஜீவா நடித்து வருகிறார். அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில், கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஹரி இயக்கத்தில் ஜீவா நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பழனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா ஆகியோர் ஜீவாவுடன் நடித்து வருகிறார்கள். இப்படத்தை திகில் படமாக உருவாக்கி வருகிறார்கள். விஷால் சந்திரசேகர் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இயக்குனர் அட்லீ மற்றும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
Share
Banner

Post A Comment: