Propellerads
Navigation

தேசிய கீதத்தை தவறாக பாடியதாக அமிதாப்பச்சன் மீது புகார்


20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் அமிதாப்பச்சன், சச்சின்டெண்டுல்கர், இம்ரான் கான், உள்ளபட பிரபல கிரிக்கெட் வீரர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் தேசிய கீதத்தை பாடினார். அவர் பாடலை தவறாக பாடியதாக டெல்லியை சேர்ந்த உல்ஹாஸ் என்பவர் டெல்லி அசோக்நகர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில் “இந்திய அரசின் உள்துறை அமைச்சக வழிகாட்டுதலின் படி தேசிய கீததத்தை 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும். ஆனால் அமிதாப்பச்சன் ஒரு நிமிடம் 22 விநாடிகள் பாடினார். தேசிய கீதத்தில் இல்லாத வார்த்தைகளை பயன்டுத்தினார். சில வார்த்தைகளை தவறாக உச்சரித்தார். இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற அந்த புகார் மனுவில் குறிபிட்டுள்ளார். புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Share
Banner

Post A Comment: