Propellerads
Navigation

பாகுபலி-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வருடம் பிரம்மாண்டமாக வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘பாகுபலி’. இப்படம் இரண்டு பாகமாக தயாரானது. முதல் பாகம் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், தற்போது இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

முந்தைய பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். 

அதன்படி, 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். பாகுபலி படத்தின் முதல் பாகம் எடுக்கும்போதே, இரண்டாம் பாகத்தின் பாதி காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. தற்போது, மீதி பாதியை படமாக்கி வருகிறார்கள். முந்தைய பாகத்தைவிட, இரண்டாம் பாகத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இடம் பெறும் என கூறப்படுகிறது.
Share
Banner

Post A Comment: