Propellerads
Navigation

மலேஷிய விமான நிலையத்தில் அதிகாரிகள் பிடியில் சிக்கிய நயன்தாரா


மலேஷிய விமான நிலையத்தில், நடிகை நயன்தாரா, பாஸ்போர்ட் பிரச்னையில் சிக்கியதாகவும், போதை மருந்து கடத்தியதாகவும் நேற்று வதந்தி கிளம்பியதால் பரபரப்பு உருவானது.

நடிகர் விக்ரம், நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய படம், இருமுகன். இதன் படப்பிடிப்பிற்காக, நயன்தாரா கடந்த வாரம் மலேஷியா சென்றார். அப்போது அவர், போதை மருந்து வைத்திருந்ததாக, மலேஷிய போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும், பாஸ்போர்ட் பிரச்னையில் சிக்கியதாகவும், நேற்று தகவல் பரவியது. அத்துடன் நயன்தாராவை மலேஷிய போலீசார் விசாரிக்கும் காட்சி மற்றும் அவரது பாஸ்போர்ட் தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் பரவின.

இதுகுறித்து, சென்னை, கோடம்பாக்கம் சினிமா பகுதியான, 'கோலிவுட்' வட்டாரங்கள் கூறியதாவது: இருமுகன் படத்தில், நடிகை நயன்தாரா ரகசிய ஏஜன்ட்டாக நடிக்கிறார். அப்படப்பிடிப்புக்காக, மலேஷியா சென்ற நயன்தாராவிடம், பாஸ்போர்ட் உள்ளிட்ட மற்ற ஆவணங்களில் உள்ள பெயர் தொடர்பாக மலேஷியா போலீசார் விசாரித்தனர்; பின், அவரை அனுப்பி விட்டனர். 

நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன். சினிமாவுக்காக, 'நயன்தாரா' என, மாற்றிக் கொண்டார். பாஸ்போர்ட்டில், 'குரியன் நயன்தாரா' என, உள்ளது; இதுகுறித்து மட்டுமே விசாரணை நடந்தது. அதற்குள், 'அவர் போதை மருந்து வைத்திருந்தார்; பாஸ்போர்ட் பிரச்னை' என, வதந்தி கிளப்பி விட்டு விட்டனர். மலேஷிய விமான நிலையத்தில் நடந்த விசாரணையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. உண்மையில் அந்த படங்கள் படப்பிடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்டதாகவும் இருக்கலாம். இதுகுறித்து, நயன்தாராவோ அல்லது படக்குழுவினரோ சொன்னால் மட்டுமே உண்மை தெரிய வரும். இவ்வாறு, 'கோலிவுட்' வட்டாரங்கள் கூறின.

இருமுகன்' படக்குழு விளக்கம்: நயன்தாரா பிரச்னை குறித்து, இருமுகன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கை:மலேஷியாவின், இரண்டு பன்னாட்டு விமான முனையங்களில் பணி அனுமதி விதிமுறைகள் வேறுபட்டவை. வழக்கமாக இந்தியாவுக்கு செல்லும் பயணியர், 'கே.எல்.1' முனையம் மூலம் பயணிப்பர். ஆனால், புதிய விமான சேவை நிறுவனமான மலிண்டோ, 'கே.எல்.2' முனையம் மூலம் இயங்குகிறது. அந்த முனையத்தில், குடியேற்ற அதிகாரிகள், நயன்தாராவின் உதவியாளர்களிடம் அவர்களுக்கான பணி அனுமதி மற்றும் அதன் விசா முத்திரை பதிவுக்கான சில விளக்கங்களை கேட்டுள்ளனர். நயன்தாராவே அதிகாரிகளிடம் பேசி பிரச்னைகளுக்கு தீர்வு கண்டதோடு, அவரும், அவரது உதவியாளர்களும் இந்தியாவுக்கு எந்த இடையூறுமில்லாமல் பயணித்துள்ளனர்.

நயன்தாராவின் பாஸ்போட் நகல், மலேஷிய இணைய தளங்களில் வெளியானது குறித்து, மலேஷிய காவல்துறையில் புகார் தந்துள்ளோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share
Banner

Post A Comment: