Propellerads
Navigation

அபிஷேக் பிறந்தநாள் மாலத்தீவில் அமிதாப் குடும்பத்தினர் சுற்றுலா

பாலிவுட் பாட்ஷாவான அமிதாப் பச்சன் அவருடைய குடும்பத்தாருடன் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இன்று அவருடைய மகன் அபிஷேக் பச்சனின் 40வது பிறந்த நாள். அதையொட்டியே அவர் குடும்பத்தாருடன் சேர்ந்து பிறந்த நாளைக் கொண்டாட சுற்றுலா சென்றுள்ளதாகத் தெரிகிறது. 

அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா, மனைவி ஜெயா பச்சன், மகள் ஸ்வேதா நந்தா ஆகியோர் தற்போது மாலத்தீவில் சுற்றுலாவில் உள்ளனர்.

தன்னுடைய பிளாக்கில் தினமும் ஏதாவது ஒரு விஷயம் பற்றி தவறாமல் எழுதி வரும் அமிதாப் பச்சன் தன் குடும்பத்தாருடன் விடுமுறையில் இருப்பதைப் பற்றி அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

“தூரத்தில் சூரியன் மறைவது நிழலாகத் தெரிய, பக்கத்தில் குடும்பத்தினர் இருக்க, அலைகள் இதமாக அடித்துக் கொண்டிருக்க, மற்றவர்களுடனான உரையாடலில் இந்த நாள் இனிமையாகக் கழிந்தது,” என அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.
Share
Banner

Post A Comment: