Propellerads
Navigation

இறுதிச்சுற்று பார்க்க ஆசைப்படும் மைக் டைசன்

மாதவன்-ரித்திகா சிங் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘இறுதிச்சுற்று’. இப்படத்தை சுதா கங்கோரா பிரசாத் இயக்கியிருந்தார். தமிழ், இந்தி என ஒரே நேரத்தில் தயாராகியிருந்த இப்படம் இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளிவந்தது. 

முழுக்க முழுக்க பாக்சிங்கை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ள இப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தை பார்த்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், உலகின் புகழ்வாய்ந்த குத்துச்சண்டை வீரரான ‘மைக் டைசன்’ இறுதிச்சுற்று படத்தை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவரது அதிகாரப்பூர்வ பேஸ்புக் வலைத்தளத்தில், பிரபல ஆங்கில இணையதளத்தில் வெளிவந்த ‘இறுதிச்சுற்று’ படத்தின் விமர்சனத்தை பதிவு செய்து, இந்த பாக்சிங் படத்தை பார்க்க ஆசைப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

உலகின் மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான மைக் டைசனையே ஈர்க்கும் அளவுக்கு ‘இறுதிச்சுற்று’ படம் அமைந்ததில் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Share
Banner

Post A Comment: