விக்ரம் பிரபு-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வெளிவந்த ‘இது என்ன மாயம்’ படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, விஜய் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக பிரபுதேவா நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கவுள்ளனர். மூன்று மொழிகளிலும் பிரபுதேவா நன்கு பரிச்சயமானவர் என்பதால் இவரை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளார். மேலும், வில்லன் நடிகர் சோனு சூத் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
விரைவில் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள். இப்படத்தை பிரபுதேவா, மும்பையை சேர்ந்த பாப்கார்ன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.


Post A Comment: