Propellerads
Navigation

கமலின் உதடு முத்தம் பிடிக்காது: ஷகிலா

மலையாளத்தில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த ஷகிலா, தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கமலின் உதடு முத்தம் பிடிக்காது என்று கூறியிருக்கிறார்.

கமல் பற்றி அவர் கூறும்போது, ‘கமலிடம் எல்லாமே பிடிக்கும். அவர் என் அண்ணன் மாதிரி. ஆனால், அவரிடம்  உதடு முத்தம் மட்டும் பிடிக்காது. அண்ணன் என்பதால் அந்த காட்சியை பார்க்கும் போது எனக்கு ரொம்ப வெட்கமாக இருக்கும். மற்ற படி அவருடைய நடிப்பு. வசனம் பேசுவது அனைத்தும் பார்த்து பிரமித்து போவேன்.

படத்திற்கு ஏற்றார்போல் இங்கிலீஷ் பேசுவது, தமிழ் பேசுவது அனைத்தும் பிடிக்கும். ஒரு முறை கமலை நேரில் பார்த்தேன். எதாவது கேட்டு விடுவாரோ என்று பயத்தில் கை, கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது. பார்க்கனும் என்றும் நினைக்கிறேன். பயத்தில் பார்க்க கூடாது என்றும் நினைக்கிறேன். பார்க்கனும் என்று விரும்பினால் அவர் பார்க்க மறுக்க மாட்டார்’ என்றார்.
Share
Banner

Post A Comment: