Propellerads
Navigation

ஆபாச டைட்டிலை மாற்றாமல் அடம்பிடிக்கும் மலையாள இயக்குனர்

ஹிட் படங்களை கொடுத்து பிரபலமாகும் இயக்குனர்கள் ஒருவகை என்றால், திரைப்பட விழாக்களுக்கு தங்கள் படங்களை அனுப்பி விருதுகளை அள்ளுவதன் மூலம் பிரபலமாகும் இயக்குனர்கள் இன்னொரு வகை. இதில் மலையாள இயக்குனர் சணல்குமார் சசிதரன் இரண்டாவது வகையை சேர்ந்தவர். 

தான் இயக்கிய விருதுகளை அள்ளிய 'ஒராள் பொக்கம்' படத்தின் மூலமாக ஆன்லைன் கிரவுட் பண்டிங் தயாரிப்பு முறையை மலையாளத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர். 

இவர் இயக்கிய 'ஒளிவு திவசத்தே களி' என்கிற படமும் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு ஒரு விருதையும் பரிசையும் தட்டிச்சென்றுள்ளது.

இவர் இயக்கியுள்ள மூன்றாவது படத்தின் டைட்டில் தான் இப்போது சர்ச்சையை கிளப்பியது. இவரது படத்திற்கு செக்ஸி துர்கா என டைட்டில் வைத்துள்ளார். கேரளாவில் தற்போது சமூகத்தை அச்சுறுத்தி வரும் விஷயத்தை நையாண்டி செய்து படமாக்கி இருக்கிறாரம். அதனால் தனது படத்தின் கதைக்கு இந்த டைட்டில் தான் பொருத்தமாக இருக்கும் என ஒற்றைக்காலில் நிற்கும் இவர், இந்த டைட்டில் வேறு எந்தவிதமான பிரச்சனைகளை கொண்டுவந்தாலும் சமாளிக்க தயார் என்கிறாராம்.

நண்பர்களும் உதவி இயக்குனர்களும் சொல்லிப்பார்த்து, ஒன்றும் ஆகாமல் கையை பிசைந்துகொண்டு நிற்கிறார்களாம். படத்தின் கதாநாயகியாக ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே நடிக்கிறாராம்.
Share
Banner

Post A Comment: