Propellerads
Navigation

நிவின் பாலியை நேரில் அழைத்து பாராட்டிய விஜய்

நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘பிரேமம்’. இப்படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாது, தமிழ் திரையுலகினரையும் இப்படம் பெரிதும் கவர்ந்துள்ளது என்று கூறலாம். 

இந்நிலையில், நடிகர் விஜய் ‘பிரேமம்’ படத்தை பார்த்து வியந்து, அந்த படத்தில் நடித்த நிவின் பாலியை தனது அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்து, நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து, நிவின் பாலி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், விஜய் சார் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்ததும் ஆச்சர்யமாக இருந்தது. அவர் ‘பிரேமம்’ படத்தை மிகவும் ரசித்துள்ளார். அதனால், அந்த படத்தை பற்றியும், அதற்கு பின்னால் இருந்த உழைப்பை பற்றியும் என்னிடம் பாராட்டி பேசினார். 

அவர் ஒரு எளிமையான மனிதர். தான் ஒரு பெரிய ஹீரோ என்பதை என்னிடம் அவர் காட்டிக் கொள்ளவேயில்லை. சினிமா பற்றியும், கேரளா மீதுள்ள அவரது அன்பையும் நாங்கள் பரிமாறிக் கொண்டோம். இந்த நாள் மறக்க முடியாத நாள். 

விஜய் போன்றவர்களிடம் கிடைக்கும் மதிப்புமிக்க பாராட்டுக்கள் எனக்கு மேலும் மேலும் நல்ல படங்களை கொடுக்கும் ஊக்கத்தை தருகின்றன. அவரது மதிப்புமிக்க பழகும் தன்மையும், எளிமையான வாழ்க்கையையும் பார்ப்பதே தனி சுகம். அவருடைய ‘தெறி’க்காக காத்திருக்கிறோம். 
Share
Banner

Post A Comment: