சமீபத்தில் டுவிட்டரில் இணைந்த கமல்ஹாசன் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவரது திரைப்படங்கள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதில்...
‘உலகின் பிற நாடுகளை ஒப்பிடும் போது எந்த ஒரு இந்திய திரைப்பட படைப்பாளிக்கும் முழுமையான பேச்சு சுதந்திரம் இல்லை. இதுதான் யதார்த்த உண்மை.
எனக்கும் படம் எடுப்பதில் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. இதை ஒரு புகாராகவே வைக்கிறேன். நான் இன்னும் முழு சுதந்திரத்தை பெறவில்லை. சுதந்திரம் என்பது மாறாதது. நிலையானது. சுதந்திரம் வரம்புடன் இருக்க வேண்டும். என்றாலும், அது நமது உடல் போன்றது. அதை நாம்தான் ஊட்டி வளர்க்க வேண்டும். காக்க வேண்டும். நமது சுதந்திரம் நமக்கு அவசியமானது. அது வழங்கப்பட வேண்டும்’ என்றார்.


Post A Comment: