Propellerads
Navigation

சிம்புவின் மூன்றுமுகம்


'த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா' எனும் 'அடல்ட்' காமெடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். கமர்ஷியல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது இந்தப்படம். 'த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா' படத்திற்கு பிறகு ஆதிக், நடிகர் சிம்புவை வைத்து படம் இயக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வந்த நிலையில், இப்போது இருவரும் இணைவது உறுதியாகியுள்ளது.

சமீபத்தில், சிம்புவை, ஆதிக் ரவிச்சந்திரன் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடத்தில் ஒரு கதையை சொல்லியிருக்கிறார். இந்த கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்துபோய்விட்டதாம்.

இதுப்பற்றி ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளதாவது... சிம்புவை சந்தித்து ஒரு கதை சொன்னேன். அவருக்கு பிடித்திருந்தது, செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார். இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில வெளிவரும். இப்படத்தில் ஆக்ஷ்ன், ரொமான்ஸ், காமெடி என எல்லாவிதமான கமர்ஷியல் அம்சங்களும் உள்ளன. அதுமட்டுல்ல சிம்பு இப்படத்தில் மூன்று விதமான ரோல்களில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் பாலிவுட் ஹீரோயின் என்று கூறியுள்ளார்.

பீப் பாடல் சர்ச்சையினால் தலைமறைவாக இருந்து வந்த சிம்பு, சமீபத்தில் தனது பிறந்தநாளின் போது வெளி உலகுக்கு வந்தார். தற்போது அவர் நயன்தாராவுடன் நடித்துள்ள 'இது நம்ம ஆளு' படத்தில் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறார். இதுதவிர கெளதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்திலும் நடிக்கிறார். இவை எல்லாவற்றையும் முடித்த பின்னர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிக்க இருக்கிறார் .
Share
Banner

Post A Comment: