Propellerads
Navigation

பேய் படங்களில் நடிப்பது திரில்லிங்கான அனுபவம்! சொல்வது நம்ம திரிஷா

கோடம்பாக்கத்தில் பேய் சீசன் தொடங்கியதை அடுத்து சூர்யா, ஜெயம்ரவி என முன்னணி ஹீரோக்களே பேய் கதைகளில் நடித்து விட்டனர். அதோடு, நயன்தாரா, திரிஷா, லட்சுமிமேனன், ராய்லட்சுமி போன்ற முன்னணி நடிகைகளும் பேய் கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், அரண் மனை-2 படத்தில் பேயாக நடித்த திரிஷா, இப்போது நாயகி படத்திலும் பேய் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த அனுபவம் குறித்து திரிஷா கூறுகையில், பேய் கதைகளில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு நீண்டகாலமாக இருந்து வந்தது. ஆனால் அதற்கான தருணம் அரண்மனை-2 படத்தில்தான் கிடைத்தது. முக்கியமாக பேய்க்கு பயந்து நடிப்பதை விட, பேயாக நடிப்பது ரொம்ப திரில்லிங்காக இருந்தது. பேயை யாரும் நேரில் பார்த்ததில்லை. என்றாலும் பேய் என்றாலே பயம் வந்து விடும். நானும் அப்படித்தான் யாராவது பேய் கதைகளை சொன்னாலே அக்கம் பக்கம் பார்த்தபடி பக்கத்தில் இருப்பவர்களை நெருங்கி உட்கார்ந்துகொள்வேன்.

அதோடு, படப்பிடிப்பில் நம்மை சுற்றி ஒரு கூட்டமே நிற்கும் என்றபோதும், பேயாக மாறி அந்த கதாபாத்திரமாக நடித்தபோது உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது. அந்த அளவுக்கு அரண்மனை-2வில் நான் இயல்பாக மாறி நடித்தேன். இப்போது அதை ஸ்கிரீனில் பார்க்கையில் என்னை எனக்கே பிடித்திருக்கிறது. மேலும், இன்னும் மாறுபட்ட பேய் கதைளில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் ஏற்பட்டுள்ளது என்று கூறும் திரிஷா, பேய் என்றால் நமக்கு பயம் வருகிறது. ஆனால் அப்படி பேயானவர்களும் நம்மைப்போன்ற மனிதர்கள்தானே பிறகு எதற்காக நாம் பயப்பட வேண்டும் என்றும் சொல்கிறார்.
Share
Banner

Post A Comment: