விசாரணை படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் மிரட்டியிருந்த நடிகர் அஜய் கோஷ், இப்போது ராஜமௌலியின் பாகுபலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
அனுஷ்காவின் ராஜ்யத்திற்கு உட்பட்ட நாட்டில், ஒரு கொள்ளை கூடத்தின் தலைவராக அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.சென்ற வாரம் கேரளாவில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட அஜய், மீண்டும் அடுத்த மாதம் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்ளவுள்ளார்.
விசாரணை படத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், 'படத்தில் என்னை பார்த்துவிட்டு, மக்கள் என்னை வெறுப்பார்கள் என நினைத்தேன், ஆனால் அனைவரும் என்னுடைய நடிப்பை பாராட்டியது, என்னை வியக்க வைத்தது என தெரிவித்துள்ளார்.


Post A Comment: