2016ம் ஆண்டிற்கான நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன.2011 மற்றும் 12 ம் ஆண்டில் கோப்பையை வென்ற சென்னை ரைநோஸ் அணி, இந்த வருடம் ஒரு வெற்றி கூட பெறமால், தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.
கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியோடு இன்று மோதிய ஆர்யா தலைமையிலான சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 156 ரன் மட்டுமே எடுத்தது.பின்னர் விளையாடிய கேரளா அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கேரளா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.


Post A Comment: