Propellerads
Navigation

ஆஸ்கர் விருது 2016 முழுவிவரம்


சினிமா உலகின் மிக உயரிய விருதுகாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்தாண்டுக்கான 88வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. ஒட்டுமொத்த ஹாலிவுட் திரையுலகமும் இந்த விழாவில் குவிந்தனர். முன்னதாக ஹாலிவுட் பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.


விழாவில், மேட் மேக்ஸ், தி ரெவனென்ட், மேட் மேக்ஸ் பியூரி ரோடு, தி மார்ஷியன் படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் 'மேட் மேக்ஸ் பியூரி ரோடு' படம் அதிகபட்சமாக 6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றதது. ஏற்கனவே 4 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'டைட்டானிக்' புகழ் லியார்னோ டி கேபிரியோ முதன்முறையாக 'தி ரெவனென்ட்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றார்.

ஆஸ்கர் விருது விபரம் வருமாறு....

சிறந்த நடிகர் : லியார்னோ டி கேபிரியோ - 'தி ரெவனென்ட்'

சிறந்த நடிகை : பிரீ லார்சன் 'ரூம்'

சிறந்த படம் : 'ஸ்பாட் லைட்'

சிறந்த இயக்குநர் : அலெக்ஸாண்ட்ரோ ஜி இனாரிட்டு - 'தி ரெவனென்ட்'

சிறந்த துணை நடிகை : அலிசியா விகாண்டர் (தி தனிஷ் கேர்ள்)

சிறந்த துணை நடிகர் : மார்க் ரைலன்ஸ் (ப்ரிட்ஜ் ஆப் ஸ்பைஸ்)

சிறந்த இசை : என்னியோ மோரிகோன், படம்: 'தி ஹேட்புல் எயிட்'

சிறந்த பாடல் : ரைட்டிங்ஸ் ஆப் தி வால்... 'ஸ்பெக்டர்'

சிறந்த ஒளிப்பதிவு : இம்மானுவேல் லுபெஸ்கி (தி ரெவனென்ட்)

சிறந்த படத்தொகுப்பு : மார்கெரட் சிக்ஸல் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)

சிறந்த திரைக்கதை : டாம் மெக்கார்தி, ஜாஸ் சிங்கர் (ஸ்பாட் லைட்)

சிறந்த தழுவல் திரைக்கதை : சார்லஸ் ராண்டோல்ப், ஆடம் மெக்காய் (தி பிக் ஸ்பார்ட்)

சிறந்த கலை இயக்கம் : கோலின் கிப்சன், லிசா தாம்ஸன்(மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)

சிறந்த கலை இயக்குனர் : கோலின் கிப்சன் மற்றும் லிசா தாம்ஸன் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்கார விருது : லெஸ்லீ வேண்டர்வால்ட், எல்கா வார்டேகா மற்றும் டேமியன் மார்ட்டின்(மேட் மேக்ஸ் - ப்யூரி ரோட்)

சிறந்த ஆடை வடிவமைப்பு : ஜென்னி பீவன் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)

சிறந்த ஒலி தொகுப்பு : மார்க் ஏ.மன்கினி, டேவிட் வொயிட் (மேட் மேக்ஸ்-ப்யூரி ரோட்)

சிறந்த ஒலிக்கலவை : கிரிஸ் னென்கின்ஸ், கிரேக் ருட்லூஃப், பென் ஒஸ்மோ

சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் : மார்க் வில்லியம்ஸ் ஆர்டிங்டன், சரா பென்னெட், பால் நோரீஸ், ஆண்ட்ரூ வொய்ட்ஹர்ஸ் (எக்ஸ் மெசினா)

சிறந்த அனிமேஷன் குறும்படம் : பாடோ எஸ்காலா, கேப்ரியல் ஒசோரியோ வார்காஸ் (பியர் ஸ்டோரி)

சிறந்த அனிமேஷன் படம் : பீடே டாக்டர், ஜோனாஸ் ரிவேரா(இன்சைட் அவுட்)

சிறந்த ஆவண குறும்படம் : 'எ கேர்ள் இன் தி ரிவர்'

சிறந்த ஆவணப்படம் : 'எமி' (விருது பெற்றவர்கள் : ஆசிப் கப்பாடியா மற்றும் ஜேம்ஸ் ரே)

சிறந்த வெளிநாட்டு படம் : 'சன் ஆப் சவுல்' - ஹங்கேரி நாட்டு படம்


Share
Banner

Post A Comment: