தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நடிகர் சங்கத்தின் குருதட்சணை முகாம் கடந்த மாதம் நடிகர் சிவகுமாரால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகமெங்கும் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கலைத்திறன், குடும்பம் பற்றிய முழுவிவரங்களையும் சேகரித்து பதிவு செய்து அவர்களுக்கு தேவையான மருத்துவ, கல்வி, மற்றும் இதர உதவிகளை மேற்கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன் விவரங்களை சேகரித்து பதிவு செய்யும் முகாம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்கள் நடந்தது.
நடிகர்கள் பசுபதி, மனோபாலா, உதயா, ஆரி, பிரேம், அயூப்கான், நந்தா, ஹேமச்சந்திரன், நடிகைகள் கோவை சரளா, ராதா, சோனியா, சங்க மேலாளர் பாலமுருகன் மேற்பார்வையில் பல்வேறு மாவட்டங்களில் 11 மையங்களில் இந்த முகாம்கள் நடந்தன. நடிகர் சங்க மாவட்ட நிர்வாகிகளும் நியமன உறுப்பினர்களும் முகாம் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு வெற்றிகரமாக முகாமை நிறைவு செய்துள்ளனர். சென்னையில் மட்டும் இம்முகாமின் மீதமுள்ள பணி விரைவில் நிறைவடைந்து விடும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: