Propellerads
Navigation

நடிகர் பிரபுதேவாவுடன் டோனியின் வேட்டி நடனம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இதனால் அவருக்கு தென் இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். ராஞ்சியில் பிறந்த அவருக்கு சென்னை 2–வது தாய் வீடாகும்.

கிரிக்கெட்டில் தனது திறமை மூலம் பெருமை சேர்த்து புகழ்பெற்ற டோனி பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியில் அவர் நடனமாடும் விளம்பரம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

மோட்டார் பைக் விளம்பரமான இதில் டோனி நடிகர் பிரபுதேவாவுடன் இணைந்து நடனமாடுகிறார். இருவரும் வேட்டி அணிந்து நடனமாடும் இந்த விளம்பரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
Share
Banner

Post A Comment: